MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

மெய்யும் பொய்யும்

​ 

மனித உடலுக்கு பெயர் மெய் என்று சொல்வார்கள்!

பொய்யான உடலுக்கு மெய் என்று பெயர் எப்படி வந்தது? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஞானம் இருப்பது குப்பாயத்தில் அல்ல

எழுதியவர்: மெயில் ஒப் இஸ்லாம்

இஸ்லாத்தின் ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்ககள் உருவாகிய நோக்கம் ஆடையை தூய்மைப்படுத்துவதற்கு அல்ல, ஆத்மாவை தூய்மைப்படுத்துவதற்கே.


பொறாமை, பெருமை, கர்வம், ஆணவம், வேற்றுமை, பிரிவினை, அறியாமை, சுயநலம் இது போன்ற நப்ஸ் அம்மாரா எனும் தீய ஷெய்த்தானிய குணங்களை உள்ளத்தில் இருந்து நீக்கி மனிதனை புனிதனாக ஆக்கவே ஆன்மீக கல்லூரிகள் உருவாகியது.


அத்தகைய அன்பு, அறிவு, ஞானம், பொறுமை, பணிவு, சாந்தி, சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் போன்ற நற்குணங்களை போதிப்பவரையே ஞான ஆசிரியர் அல்லது ஷெய்க் என்று சொல்லப்படும்.


இதற்கு மாற்றமாக எவர் துர்க்குணங்களை போதித்து மனிதனாக இருப்பவனை மிருகங்களாகவும், தீவிரவாதியாகவும், பயங்கரவாதியாகவும் உருவாக்குகின்றார்களோ. அவர்கள் தான் ஷெய்தான்கள்.


(உள்ளத்தை) தூய்மைப்படுத்தி கொண்டவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார். (அல் குர்ஆன் 92:9)


இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:

தெளிந்த உள்ளம் கொண்ட மெய்ஞ்ஞானிக்கு எதிரில் அமர்ந்து அவரது சைக்கினையின் படிச் செயலாற்ற வேண்டும். இது ஒரு மனிதனுக்கும் அவன் பின்பற்றி நடக்கும் பெரியாருக்கும் இடையில் நடைபெறும் முறை: ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவில் உருப்பெறும் முறை! இந்த முறை தற்காலத்தில் மிகவும் அபூர்வம்! இத்தகையவர்களைக் காணுவதே அரிது!


கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:​

தங்களை சூபிகளென்றும், தரீக்காக்காரர்களென்றும் அழைத்து கொள்ளும் வேஷதாரிகளே. உங்களின் “ஸுப்” எனும் கம்பளி போர்வையாலோ, பச்சை போர்வையாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை. முதலில் உங்களின் உள்ளத்தை, இதயத்தை, சுபாவத்தை தூய்மைப்படுத்துங்கள்.


ஆத்ம சுத்தமில்லாத உடற் சுத்தமும், ஆத்ம ஜோதியற்ற உடை அலங்காரமும் காரியத்திற்கு உதவப்போவதில்லை. முதலில் வீட்டை கட்டி அதனைச் செம்மைப்படுத்தி கொண்டல்லவா கதவை அலங்கரிக்க வேண்டும். வீடு ஓட்டையாய் இருந்து கதவு மட்டும் டாம்பீகமாக இருந்தென்ன பயன்? ஆகையால், முதலில் உள்ளே சீர் பெறச் செய்யுங்கள். கதவை அப்புறம் கவனித்துக் கொள்ளலாம். அகம் அற்ற புறத்தைக்கொண்டு ஆவதொன்றுமில்லை.


உங்களுக்கு உண்மையான கல்பு வேண்டுமாயின், அகக்கண் திறந்த நாதாக்களின் சகவாசத்தில் அண்டிப் பழகுங்கள். சம்பூர்ணத் தன்மை பெற்ற ஒரு ஞான குருவை (ஷைகை) தேடி கண்டு கொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் தன்மை உடைய அப்பெரியார் உங்களை பரிசுத்தப்படுத்தி, ஞான போதங்களை அருளி, உங்களுக்கு நல்வழி காட்டுவார்.


ஹழ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீத் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:

ஞானம் என்பது உங்கள் நீண்ட அங்கியிலோ ஜபமாலையிலோ இல்லை. இதயத்தை பரிசுத்தப்படுத்துவதில் ஏற்படும் தெய்வீக உதிப்பு. இதுவே ஞானமாகும்.


இன்று உலகில் ஆன்மீக கல்லூரிகள் எதற்காக உருவாக்கப்பட்டது என்று வஹாபி வழிகேடர்களுக்கும் விளங்கவில்லை, ஒரு சில ஆன்மீகவாதி என்ற பெயரில் இருந்து கொண்டு மார்கத்தை வெறும் சடங்காக்கி வருடத்திற்கு ஒரு முறை மௌலித் ஓதுவதும், மீலாத் கொண்டாடுவதும், கந்தூரி கொடுப்பதும், கொடியேற்றுவதும், கப்ருகளுக்கு சந்தனம் பூசுவதும் இது போன்ற ஒரு சில விஷயங்களை மட்டும் செய்து விட்டு, தங்களையும் ஆன்மீகவாதி என்று உலகிற்கு காட்ட முயல்கிறார்கள்.


பாமரமக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் தரீக்காக்களின் வேலையே இதுதான் போல என்று தவறாக விளங்கி வைத்துள்ளார்கள்.


அத்தகைய மக்களுக்கு நாம் தெளிவை கொடுத்து ஆன்மீகத்தின் பக்கம் அழைக்க வேண்டும். இத்தகைய அமல்களை நமக்கு ஸுபியாக்கள் சொல்லி தந்த நோக்கம், நல்லடியார்களின் துஆ பாரக்கத்தை பெற்று அல்லாஹ்வின் அருளை பெறுவதற்கே என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.


ஆன்மீகம் என்றால் என்ன?

​ 

ஆன்மாவை மீட்டுதல் அல்லது ஆன்மாவின் மீட்சி என்று சொல்லலாம். அப்படி ஆன்மாவை மீட்டுதல் என்றால் எங்கிருந்து மீட்டுவது? என்பதை அறிந்துகொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

ஞானம் என்றால் என்ன?

​ 

ஞானம் என்பது அறிவில் தெளிவு, அறிவையறிந்த தெளிவு. விண் ஞானத்தை அறிந்தவர்கள் விஞ்ஞானிகள். மெய்ஞானத்தை அறிந்தவர்கள் மெய்ஞானிகள். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.