MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ரமலான்
**************
Allahumma Sallimnee, Sallimnee Li Ramadhan(2)
Sallimnee Sallimnee Wa Sallim Alaa Ramadhan
Marhaban Ahlan Wa Sahlan Marhaban Ya Ramadhan
Ramadhan Ya Ramadhan , Ya Sayyidhash Shuhoor
இரஜபோடு ஷஃபான் திங்களிரண்டில்
இறையின் பொலிவு ஓங்கிடனும்
பொங்கு மகிமை மாதம் ரமழான்
எங்களிடையே வர வேண்டும்
ரய்யான் என்னும் சுவன வாயில்
மெய்யாய் நாமும் ஏகிடவே
பங்கம் போக்கும் சங்கையோங்கும்
திங்கள் ரமழான் வருகவே
அருளொரு இறையின் மஃபிரத்தென்னும்
பெருநிதி எங்கும் பெருகிடவும்
பெருஞ்தழல் நரகத் தளை தனை யறுத்து
அருஞ்சுக சுவனம் தந்திடனும்
கேடுகள் தடுக்கும் கேடயமான
ஸவ்மெனும் விரதம் பூண்டிடனும்
இறைமொழி நபி வழி தன்னைப் பேணி
அறங்கள் பலவும் விளைத்திடனும்
லைலத்துல் கத்ரு எனுமுயரிரவின்
அலகில் நன்மை பெற்றேக
அகிலங்களனைத்தின் அரசாம்
அல்லாஹ் இரங்கியெம் மீது அருளிடனும்
மணங்கமழ், மனங்கவர் மா நபி நாதர்
மன்னவர் முஹம்மதர் முக மலர்க்காய்
வான் மழை சொரியும் அன்னவர் மீது
அஸ்ஸலாத்து வஸ்ஸலாம்
ஆடியோவில் கேட்க :
என்னிறை ஈந்த இன்னருளே
*********************************************
என்னிறை ஈந்த இன்னருளே
நன்னபி புகழைப் பாடுகிறேன்
அண்ணலர் கீர்த்தி யோதி யோதி
என்னின் தேவைகள் நிறைக்கின்றேன்
என்னுயிரே அர்ப்பணம் என்னன்பிக்கே
என் உடலும் அர்ப்பணம் அன்னவர்க்கே
பெற்றோரும் அர்ப்பணம் எம் நபிக்கே
எல்லாமே அர்ப்பணம் அன்னவர்க்கே
நேசர் நபியின் பாசமோங்கி
தாசன் நானும் பாடுகின்றேன்
யா ரசூலல்லாஹ் வென்றுரத்து
கூவியழைத்தே மகிழ்கின்றேன்
கண்ணின் மணியாம் காஸிம் நபியின்
விண்ணுற ஓங்கும் புகழ்க கூறும்
அன்னவர் காதலர் நமக்கெப்போதும்
என்றும் மவ்த்தின் பயமேது
கப்ரில் செல்லும் போது கூட
முஸ்தபாவின் புகழ் சொல்வேன்
முஸ்தபாவின் பித்தன் இவனென்
உலகோர் கூற நான் மகிழ்வேன்
அதரம் அசைந்து பேசுந் தோறும் என்
அஹ்மதர் புகழே நிலைத்திருக்கும்
மஹ்மூதர் புகழைப் பாடி பாடி
மகிழுயர் நிலையை யடைவோமே
கண்ணியர் காதலில் தோய்ந்து தோய்ந்து
புண்ணியம் பெற்றார் ஷெய்க் சஅதி
மன்னவர் புகழை பாடுமவரே
“பலகல் உலா நவின்ராரே” (பலகல் உலா)
ஆடியோவில் கேட்க :
ஏகோன் தூதே
***********************
ஏகோன் தூதே
எமையாளும் வேந்தே
எம் நேசர் நபியே
எம் முயிரினு மேலே
ஆமினா பீபியின் நறு நந்தவனத்தின்
அருந்தென்றல் அணைய வீசுதே
வானும் பூவும் சல்லல்லாஹு அலைஹி
வசல்லம் கூறுதே
ரபீஉல் அவ்வல் பத்தோடிரண்டில்
ரஹ்மத் எம்மிடை வந்ததே
நுபுவ்வத்தின் ஒளியாய்
ரிசாலத்தின் முடிவாய்
அருங்குணக் குன்றாய்
பிறந்தார்கள் மதனி
முத்தினைப் பளிக்கும் புன்
முறுவல் பூக்கும் இன்
முகம் கண்டார் பெறுவார்கள் ஜெயமே
ஒளியே நிரம்பும் சந்திர வதனா
நிலையான ஏகன் ஹபீபான மதனீ
பாலகர் அஹ்மதர் சந்தணத் தொட்டில்
தாலாட்டுப் பாடி மகிழவே வந்தார்
வானவர் கோனும் ரஹ்மத்தே ஆலம்
கண்வளர்தற்காய்
பண்பாடி திளைத்தார்
முடிவு துவக்கம் என் "ஆக்கா" அறிவார்கள்
அருகும் தூரமும் அன்னவர்க் கொன்றே
மறைவிலிருக்கும் செய்திகள் சொல்லும்
இறையோன் ஹபீப்(ஆன) எங்களின் மதனீ
ஹாமித், மஹ்மூத் இன்னும் முஹம்மது
ஹுல்வத்தான பெயர் கூறி மகிழ்வோம்
இகத்திலும் பரத்திலும்
ஈடேற்றும் தலைவர்
ஈமானுள்ளோர்க்கு
இன்னுயிரிலும் மேலாம்
ஆடியோவில் கேட்க :
ஒளியாம் நபிகள் வந்தார்கள்
*********************************************
ஒளியாம் நபிகள் வந்தார்கள்
ஒளியைக் கொண்டு தந்தார்கள்
எல்லா உலகும் ஒளியாய்க்காணும்
வழியைக் காட்டி தந்தார்கள்
வானின் பானும் மின்னும் மீனும்
மன்னிய ரொளியாலிலங்கினவே
அண்ணல் நபியின் உதயம் நினைந்து
புண்ணியம் சேர்க்க வாரீரோ
மஹ்பூபுவின் மஹ்பூபாம் நபி
அஹ்மதர் புகழையோதிடுவோம்
தீதுகள் களைந்து மாதவம் சேர்த்து
நாதர் நல்வழியில் சார்ந்திருப்போம்
அருளொடு அன்பாய் நிலைத்திடும் ஏகன்
அருளாய் அவனியில் பிறந்தோரை
“யா ரசூலல்லாஹ்” என்றேங்கி
இரைந்தே காதலில் கரைந்திடுவோம்
இல்லந்தோறும் வீதி(கள்) தோறும்
அவர் புகழ் பாடி மகிழ்த்திருப்போம்
நல்லவராகும் வழியினைக் காட்டும்
அண்ணலர் அன்பில் நிலைத்திருப்போம்
இம்மையேயன்றி மறுமை யந்நாளிலும்
மன்னவர் புகழே உயர்ந்திருக்கும்
மர்ஹபன் யா முஸ்தபா – என்றேற்றி
பரவசம் பூண்டிருப்போம்
புண்ணியம் சுமந்த அன்னயராமினார்
கண்ணிய பாலகர் பிறந்ததினால்
மண்ணிலும் விண்ணிலும் முஃமினானோர்
கண்கள் குளிர்ச்சி கண்டனரே
ஈது மீலாதுன்னபியை
இகமதில் மகிழ்வுடன் கண்டவர்கள்
தீது உள்ளோராயினுங் கூட
பாதகம் துறந்து சிறப்பாரே
காலைக் கதிரும் கூட மதீனா
ஒளியை பெற்று விரிந்திடுமே
மாலை மதியும் மீனும் அதுபோல்
மன்னவர் ஒளியை இரந்திடுமே
நாதியற்றவர் துயரம் தோய்ந்தவர்
பீதி யகற்றும் அரு மருந்தே
நாதர் தோன்றிய ஈது மீலாதெனும்
காதல் தினம் தான் உணர்வீரே
சாந்தொளி அண்ணலர் வழிதனில் வந்த
சந்ததியனைவரும் ஒளியினரே
தூயவரன்னவர் நிறையொளியெல்லாம்
நூரு முஹம்மதர் கண்ணொளியே
ஆடியோவில் கேட்க :
ஓர் தினம் வந்திடுமே
*********************************
கருணை நபி ரவ்ளாவை காண...
கருணை நபி ரவ்ளாவை காண மதீனா செல்வோமே
ஓர் தினம் வந்திடுமே அந்நாளில் நாம் மதீனா செல்வோமே
மதனி மன்னவ அகிலத்தின் அருளே -
நபி யோர்க்கரும் அரசே கண் பாருங்களேன் -
ஒளிர் ராவிலாவின் மாட்சி கண்ணினில் தாருங்களேன்
பன்னாள் நான் தங்கும் தாகம் தீர்க்க நன் மதீனா செல்வோமே
பெருமாவல் கொண்டேனே பெருமானின் கதத்தில்
கண் மடை திறந்திடவே
என்னால் அருள் பார்வை நாம் மேல் படுமோ
மதீனே ஹம் சப் ஜாயேங்கே
இந்நாள் வரை காணாதிருந்த காரணம் அறியேன் அறிவிலி யான்
எண்ணின் இதய துடிப்பு சொல்லும் சொல்லும் செய்தி இதே
எந்தன் இதயத்தின் துடிப்பு துடிப்பு
இதயத்துதிப்பு இதயத்தின் துடிப்பு சொல்லும் சைதி இதே
மரணம் வந்து தழுவும் முன்னே - மதீனே ஜாஊங்கா
ஆ.. அமினாவில் மீம் உளதே போல் ஹலீமாவிலும் உளதே
மீலாதிலும் மீம் உளதே - மஹ்ஃபலிலும் அம் மீம் உளதே
முரீதில் உள்ள மீம் அதுவே முர்ஷிதிலும் உள்ளதே
என்னென்ன விந்தை உள்ளதோ முஹம்மதின் மீமிலே
மக்காவிலுள்ள மீம் மதீனாவில் உள்ளதே
இம் மீம் தனில் மறைந்த ரகசியம் அலிஃப் லாம் மீமிலே
ஆடியோவில் கேட்க :
நன்னபி நயன மணி
*******************************
நன்னபி நயன மணி
நாதர் மேல் வாழ்துரைத்தான்
வளம் மிகப் பெருகி வர
வாயார சொல்வீர் ஸலா...த்
மக்க நகர் முழுமதிமேல்
எக்காலும் கோடி சலாம்
மதீனத்து இளங் கதிரே
கோடி மேற் கோடி சலாம்
நீதிநாள் ஆதாரம் மேல்
கோடான கோடி துரூத்
தீதுகள் தீர்த்து வைப்போர்
மீதிலே கோடி சலாம்
அறிவீர் அருள் நபிகள்
அத்துணை பேரிலும் மேல்
அங்கையர் ஆணையிட
அம்மதி பிளந்து காண்பீர்
இன்னுயிரே உளங்குளிர
கண்முன்னே வருவீர்களே
கல்பெனின் கண்ணில் வைத்தேன்
கருணை தருவீர்களே
முத்தொளியே மாணிக்கமே
முடிவில்லை (நுமை) புகழுதற்கே
முஸ்தஃபா எனுமினியோர்
மீதிலே கோடி ஸலாத்
நன்னபியை நினைக்கையிலே
நம்மிதயம் உயிர் பெறுமே
நஸாரா யூதருமே
தண் கரத்தில் சரண் பணிந்தார்
கன்னியர் ஹஸன் வ ஹுஸைன்
மணமுயர்ந்த இரு மலர்கள்- நபி
கண்குளிர் அன்னை பதூல்
இன்னவரை வாழ்த்திடுவோம்
நாங்களோ நும்மடியார்
தாங்களோ சிறப்புயர்ந்தோர்
எங்களின் வாழ்வு எல்லாம்
தங்கள் புகழ் பாடுதற்காம்
ஆடியோவில் கேட்க :
நாலாப்புறமும் ஒளி சூழும்
******************************************
நாலாப்புறமும் ஒளி சூழும்
நாதரின் மீலாது காண்போம்
சந்தோஷ சேதி வரக்காண
சர்தாரின் நினைவிற்றிழைப்போம்
ஆதவனும் அம்புலியும் சேர்ந்தே
நாதரவர் பிறப்பினை கொண்டாடும்
பன்மீனும் நன்னபியின் ஒளியால்
மின்னும் படியாற் கொண்டாடும்
ஆனந்தக் களிப்பால் கவி பாடி
அண்ணலவர் அருங்குணமே கூறி
கொண்டாடும் அவர் அன்பர் யாரும்
இன்னருளைப் பெற்றவரே காண்பீர்
இரசூல் நயினார் பிறந்த நாளில்
இல்லங்கள் வீதிகள் துலங்கும்
பன்னிற தீபங்கள் இலங்க
நன்னாளை நாம் எண்ணி மகிழ்வோம்
ஒளிவார்ந்த மனிதர் எம் நபிதாம்
உலகத்தை நிர்வகிப்போர் என்றும்
களியோடு கூறும் அன்னவர்தாம்
கனி நபியின் கோஷம் உரைப்பர்
மன நாட்டங் கொண்டிந்த மஹ்பிலில்
மாண்பாய் அமைந்தோர்கள் யார்க்கும்
பன்னாட்டம் இரையருளாற் கூடும்
நன்னாளை நாம் எண்ணி மகிழ்வோம்
கவ்துல் வரா, கன்ஜபக் ஷும்
கன்னல் மொழி ரஜா பீரும்
காஜாவெனும் ஏழைக்காவலர்
எல்லாரும் இந்நாளில் மகிழ்வார்
மரங் கூட நபி மாண்பறிந்ததே
சிறு கற்கூட நபியன்பை விழைந்ததே
கருணையென் நபி எமது பாக்யமே
அருளாளனைப் போற்றி புகழ்வோம்
நபி புகழை புகழ்ந்தோதும் போது
கவி இதயம் புதுமையால் நிரம்பும்
புகழோதும் ஏழையரெம் மீது
ரகுமானருள் புரிவான் ஆமீன்
ஆடியோவில் கேட்க :
பசு மன்ற நிழல் வாழ் நபியே
********************************************
பயல் எந்தன் முறையீடு கேட்பீர்
மரணம் எனை தழுவிடும் நேரம்
தீதார் எனக்கருள்வீரே
நூருல் ஹுதா தாங்கள் வந்து
எந்தன் நயனத்தில் சமைந்திட வேண்டும்
உங்கள் வாயிலுக்கழைத்திட வேண்டும்
அன்றேல் கனவினில் தான் வர வேண்டும்
திரை மறைவினில் வாழ்ந்திருப்போரே
எந்தன் இதயத்தில் வாழ்ந்திட வேண்டும் (மரணம்)
மஹ்பூபே இலாஹி என் உயிரே
என் உயிரினும் உயர்ந்த நன் நபியே
உம் போல் அழகெங்கும் நான் காணேன்
உமை புகழ்வோர்க்கும் புகழே நபியே
ஒளி தனக்குண்டோ எங்கும் நிழலே
ஒளியாம் நபிக்குமிலை நிழலே (மரணம்)
கப்ர் இருளினில் தனிமையும் சூழ்ந்து
கதியின்றி திடுக்கமும் சேர்ந்து
கதி எண்ணி கவன்றிரும் பொது
உதவிட என் ரஸூல் வர வேண்டும்
எம் மண்ணறை ஒளியினில் இலங்க
மன்னானுக்காய் சற்றிரங்கி (மரணம்)
பெரும் பாவங்கள் செய்தேன் இவ்வுலகில்
கடும் பாதகம் புரிந்தேன் இப்புவியில்
எந்தன் இதயத்தின் வேட்கைகள் தீர
முன்னொனிறை நேசரே தாஹா
இன்னாளில் வரும் அந்நாளில்
எனை ஏற்றருள் சேர்க்கணும் மன்னா (மரணம்)
வான் மீனினம் பாண் மதியும்
பாண் முக ஒளி கொண்டே ஒளிரும்
எங்கள் ஏந்தலே உங்களின் பொருட்டே
துக்கத் துயர பிணி நோய் அகலும்
துயரத்தில் கவலும் உம் அடியார்
இதயம் மகிழ்ந்திட அருள்வீர் (மரணம்)
ஆடியோவில் கேட்க :
மதீனா தைபா மா நகர் ஒளியில்..
***************************************************
மதீனா தைபா மா நகர் ஒளியில்
அண்டம் ஒளி கொண்டிலங்கினவே
மதியும் வானின் மீனினம் முழுதும்
நபி ஒளி கொண்டே துலங்கினவே
யா ரஸூலல்லாஹ் எமின் உயிரே!
எம் உயிரின் உயிரே கண்மணியே !!
அருளாம் உங்கள் பிறை நுதல் என்றும்
அழகாம் மகுடமாய் ஒளிர்ந்ததுவே
யா ரஸூலே நாம் உங்கள் அடிமை
நீங்களோ மன்னவர் மன்னவரே
பாரில் யாமும் பலன் பெறவே
எமை நூராம் ஒளியால் நிறைத்திடுவீர்
மகுடம் தரித்த மன்னவர் கூட
தங்கள் மதி முகம் கண்டதுமே
பணிந்தே தாழ்ந்தே புகழ்ந்து நிற்பரே
எங்கள் உயிரே யா நபியே
அருள் உங்கள் இதயம் ஒளி விளக்காகும்
அழகிய உடலே மணி மாடம்
தங்கள் சூரத்தின் எழில் உரைத்திடவே
சூரத்து நூரும் வந்ததுவோ
ஒளி தனக்குண்டோ நிழலது எங்கும்?
நிழலது இலையே ஒளி தனக்கே
ஒளியாம் தங்களின் பொன்னுடல்
தனக்கும் நிழலே இலையே யா நபியே
தொட்டிலில் தவழும் பாலகர் அஹ்மதர்
சுட்டிடும் தளிர் விரலசைவினுக்காய்
வானின் மதியும் ஆடியசைந்தே
மன்னவர் மனங்கொள விழைந்ததுவே
“காஃப் ஹாயா அய்னு ஸாதே”
ஒளியின் முகவெழில் விரிவுரையே
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
ரஜா எனும் அஹ்மதின் புகழ்ப்பா உயர்ந்திட
ராஜர் அஹ்மதர் இன்னருளே
நாடும் எமை மன்றாடிக் காப்பீர்
நாளை மஹ்ஷரில் கண்மணியே
ஆடியோவில் கேட்க :
மின்னத்து நபியின் நேசமே
******************************************
மின்னத்து நபியின் நேசமே - ஜன்னத்தில் சேர்க்குமே
ஜன்னத்து நபியின் காதலே - மின்னத்தை சேர்க்குமே
நம் விதியினை அமைத்திடுவார்கள் - தம் வாசலுக்கழைத்திடுவார்கள்
மஹ்மூதரின் காதலர்க்கு - பயமேயிலை பாரினிலே
மதீனாவுக்கேகும் மாண்பரே – மதித்தென்னை நீங்களே
மா நபியின் மன்றினுக்கே – அழைத்தங்கு சேர்ப்பீரே
அழகென்றால் அழகும் அதுவே- அருள் நபிகள் பசுமை மன்றே
கவர்ந்தீர்க்கும் காதல் தலம் மேல்- கவியேற்றி போற்றுவேனே
சர்க்காரும் என்னை அழைத்து மதீனாவைக் காட்டினால்
ஷபா..அத் நஸீபு அன்று.. எனை வந்து சேருமே
பூமான் நபியின் பூ.. முகம் – இப் பூ..வில் காணேனாயின்
கண் பெற்றும் பலனுமெதுவோ – பலனேதும் இல்லையே
யா ரப்பு இன்றே இவ்விரவிலே - என் நேசரின் காட்சி தா
மண் வாழ்வில் ஒரு முறை யேனும் - மதீனாவின் வாழ்வு தா
கபுரிலே சர்காரைக் கண்டு
கருணை கதத்தினில் வீழ்ந்திடுவேன்
அன்போடு அமரர் எனை எழுவென்று
சொல்லுமப்போது நான் பகர்வேன்
புண்ணிய பாதத்தில் வீழ்ந்திட்ட யானும்
எங்ஙணம் உடனே எழுந்திடுவேன்
மன்னிய நபியின் காட்சி பெறவே
மவ்த்தின் கசப்பையும் அருந்தினனே
கடல் போலும் காதல் அலைகள் - கல்பில் எழுந்ததால்
கருணை நபியின் பாதம் கண்டு – நிலை இன்றி வீழ்ந்தேனே
நிழலில்லா கொடு வெம்மை மஹ்ஷரில்
நிழலது சாயார் பரிந்துரையை
மறந்தவர் நிலை அந்தோ பாவம்
போக்குவர் எவரும் இல்லையே
இனியாயினும் ரசூலின் மண - முந்தானை பற்றியே
தனியான மஹ்ஷர் வேளை அபயம் – காண்பாயே நஜ்தியே
சிற்றடிமை யானும் எந்தன் நபியின் முற்றான காதலால்
பெற்றோர் பிறந்தோர் பொருளின் உதவி அற்றான காலையில்
வற்றாத அருளாம் நபியின் உதவி பெற்றுய்வேன் உண்மையே
ஆடியோவில் கேட்க :
ரப்ப நர்(ض)த அனில் வலீ
செய்யிதஹ்மது முத்தொலி
வர்ழஅன்னா பிஹீ
யா قوى யா على
மாண்புறு காயல் கீழ்த்திசையமைத்த
மஸ்ஜிதுல் உஸ்பூர் தனைச்சார்ந்த
மாதவர் கூடும் மதிப்புயர் தலமாம்
முத்தொலி நாதர் தைக்காவாம்
வைரங்கள் வைடூரிய மணியும்
மாணிக்க மரகத மோடுற்ற
நீல புட்பராகமும் இணைந்தாற்
போல ஒளிரும் தைக்காவாம்
நல் முத்து பவழம் கோமேதகமும்
நாற்புறம் சேர்ந்து அழகூட்ட
நாதர் துயிலும் நறுமணஞ்சேரும்
தீதறு முத்து தைக்காவாம்
சற்குரு நாதரின் உற்ற நற்றோழர்
நற்குனர் மவ்லானா பெரியார்
நித்திரை காட்சியில் கண்ட நற்பூங்கா
முத்தொலி நாயகர் உறைவிடமே
குவலயம் போற்றும் அருங்குருநாதர்
கெளதின் ஆன்மீக வழிசாரும்
கண்ணியர் அபூ துர்ருல் கபீர் அவர்
காவை சென்று காண்போமே
ரப்பனா நத்வூக பீஹி
அன் துபர்ரிஜல் குரூப்
வர்ஹம் லிஸ்(z) ஸு(z)வ்வார ரவ்லதி
பெரிய முத்து வாப்பா வலி
ஆடியோவில் கேட்க :
லா மவ்ஜூத இல்லல்லாஹ்
********************************************
வானிலும் பூவிலும் அல்லாஹ் நீ
தேனிலும் சுவையிலும் அல்லாஹ் நீ
அலையிலும் கரையிலும் அல்லாஹ் நீ
உயிரிலும் உடலிலும் அல்லாஹ் நீ
புறத்திலு நீயே அகத்திலும் நீ
புரந்தெமைக் காத்திடும் ரப்பு (ரஹ்மான்) நீ
இரந்துனை வேண்டிடும் அடியவரின்
கருத்திலும் நீ இரு கண்ணிலும் நீ
நிறத்திலும் மணத்திலும் மலரிலும் நீ
நினைவிலும் செயலிலும் சொல்லிலும் நீ
புல்புல் புள்ளிலும் சிறகிலும் நீ
தொகுதியில் நீயே பகுதியில்நீ
இணையை விட்டும் துய்யோன் நீ
காலம் தலம் விட்டும் தூயோன் நீ
கருமமனைத்து முன் ஹிக்மத்திலே
காரியமாவதுமன் குத்ரத்திலே
நானோ அடிமை மவ்லா நீ
துணை நின்றென்னை காப்போன் நீ
உன்னையறிய படைத்தாய் நீ
நின்னருளால் எனை வளர்த்தாய் நீ
உள்ளத்து பாவம் போக்கிடுவாய்
உள்ளொளி கொண்டு துலக்கிடுவாய்
கல்பினை நீயே அமர்வதற்கு
தகுதியாக்கி தந்திடுவாய்
கண்ணின் மணியாம் காஸிமை
நின்னருள் கொண்டு தந்தவன் நீ
அன்னவர் வழியில் நாம் ஏக
இன்னருள் தந்து அருள்வாய் நீ
ஆடியோவில் கேட்க :
ஞானோ தீபா
***************
ஞானோ தீபா அருள்மின்
மனம் வாடும் என் கண்முன் வருமின்
மாதாவமுதது உண்ணும் பருவத்தே
வேத போதங் கண்டீர் - அம்
மாத விதி யுபவாசங் காத்துமே
மாதவம் முனைந்தீர்
பேதகங் களைந்தீர் - பேதகங் களைந்தீர் - மோன
போதமே விளைத்தீர்
மாதவத்தினரான குத்பானோர்
நீதமுள உமது காதிமாய் நின்ற - ஞானோ தீபா
உதயன் உதய இரவி அஸ்தமன
பதியில் நின்றழைத்தால் - பெரும்
ஆழிக் கடியிலும் வானின்
வளியிடையும் கூவி உமை விளித்தால்
கிலி போக்கு(ம்) முஹ்யித்தீனே !
சிஷ்யரைக் காக்கும் முஹ்யித்தீனே ! - பெருஞ்
சங்கடந்தரும் சத்துருக்களை
சங்காரிக்க வரும் சிங்கமனைய குரு – ஞானோ
அஞ்சிறையினப் பஞ்சவர்ணக் கிள்ளை
கொஞ்சிப் பரவும் பதியாம் - கரு
மஞ்சு துஞ்சிடும் இஞ்சி விரிந்திடும்
விஞ்சை வளரும் பகுதாத்
நஞ்செய் விளையும் பகுதாத் - தீனின்
இன் சொல் வளரும் பகுதாத் - தனில்
கெஞ்சி நின்றவரை "அஞ்சேல் அஞ்சேல்" என
கஞ்ச மலர்ப்பத தஞ்சந் தந்துதவும் குரு – ஞானோ
“அண்ட கோடிகளுமோர்ப் பந்தெனக் கைக்குள்
அடக்கியாள வல்லீர்
அகிலமோர் ஏழினையும் ஆடுங் கறங்கு போல்
ஆட்டி விளையாட வல்லீர்
மண்டலத் தண்டரை யழைத்தரு கிருத்தியே
வைத்து விளையாட வல்லீர்
மண்ணகமும் விண்ணகமும் அணுவைத் துளைத்ததில்
மாட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகிலெழு கடலைப் புகட்டிக்
கலக்கி விளையாட வல்லீர்
கடிதரிய சித்தெல்லாம் வல்ல நீர்
அடிமையென் கண் முன் வருக்ஷித்திலையே”
நண்டலந்திடு நாளியாவனோ- தேவரீர் நல்லடிக்காலகியும்
நற் குணம் குடி கொண்ட பாதுஷாவான குரு நாதர் முஹ்யித்தீனே
ஆடியோவில் கேட்க :
காணலாம் கந்தூரி காட்சி
*****************************
காயலூரின் முத்தொலி யென்
காரணராம் செய்யிதஹ்மது
காவலர் தைக்கா வதனில்
சொர்க்க சுப சேதி பெற்ற
சோபனர்கள் பத்துப் பேரில்
முத்தி முதலாக நின்ற
சித்தீக் அதீக் மரபினர் காண்
வாகுடனே வைகறையில்
சேகரமாய்த் தொழுத பின்னர்
வேதியர்கள் சூழ்ந்து ஓதும்
வேத நாதம் கேட்க வாரீர்
கருக்கல் மஃரிப் வணக்கம் செய்து
கற்றவர்கள் சூழ நின்று
கொற்றவனை எண்ணி திக்ர்
ஆற்றுவதைக் காண வாரீர்
நற்கருப்பஞ் சாறதனில்
நறுங் கருந்தேன் கலந்த பாங்காய்
நன்னெறி வஃழு கேட்க
நாதர் பூங்கா ஏகி வாரீர்
நறும் புகையும் மலர் மணமும்
நாற்றிசையும் சூழும் தைக்கா
அற்புத விளக்கினையும்
ஆர்வமுடன் காண வாரீர்
அஞ்சிறை அஞ்சுகமும்
அஞ்சணக் குயில் தோகையும்
தஞ்சமென வந்திறங்கிக்
கொஞ்சும் தைக்கா காண வாரீர்
காணக் களியூறும் தைக்கா
காமிலான முத்தொலிகள்
காரணங்கள் சொல்லி மாளா
கருத்திசைந்து கேட்க வாரீர்
பேரர் அழுங் காரணத்தை
தூரத்திருந்தே யறிந்து
பிள்ளை மனங் களிப்புற
நள்ளிரவில் கனி கொணர்ந்தார்
மானுட இயல்பதனால்
மறந்து போன பேரருக்கு
விட்டுப் போன நோன்பொன்றினை
சுட்டிக் காட்டி நோற்கச் செய்தார்
கைவிளக்கில் நெய் தீர
காரிருளில் பேரர் கிலி
தீர்க்க வானின் வெள்ளி யொன்றால்
நூர்ந்த திரி ஒளிரச் செய்தார்
ஆடியோவில் கேட்க :
தமிழ் - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள் - பாக்கர் ஸாஹிப் கவிதைகள்