MAIL OF ISLAM

Knowledge & Wisdom





அத்வைதம், தௌஹீத், ஏகத்துவம் என்றால் என்ன?

​எழுதியவர்:  அஸீஸ் மரைக்கா காதிரி


அத்வைதம் என்பது ஸமஸ்கிருத மொழி!​

தவ்ஹீத் என்பது அரபு மொழி!

ஏகத்துவம் என்பது தமிழ்மொழி!

இந்த மூன்று சொல்லும் ஒரே பொருளைத் தான் தருகிறது.

.

ஏகமும் ஒரே தத்துவத்தில் இருப்பதைத்தான் அல்லது இயங்குவதைத்தான்  ஏகத்துவம்  என்பார்கள்.

.

அறிவும், ஞானமும் பொருளில் ஒன்றுதான்.

அறிவில் தெளிவு பெற்றவர்களே ஞானத்தை பெற்றவர்கள்.


​​இந்த அண்ட பிண்டம் அனைத்தும் அவன் அல்லாத ஒன்றுமில்லை ஆனால் அவன் எதுமாதிரியுமில்லை.





​​மெயில் ஒப் இஸ்லாம்:

அடிப்படை மொழியறிவு கூட இல்லாத சில மடையர்கள் "அத்வைத குப்ரியத்தை ஒழிக்க வேண்டும்" என்று கோஷமிட்டு கொண்டு, கூட்டம் கூட்டி கொண்டு திரிகிறார்கள். இவர்கள் ஒழிக்க போவது இஸ்லாத்தின் ஏகத்துவமான தௌஹீதை.


இந்த உண்மையை ஒவ்வொரு முஸ்லிம்களும் விளங்கினால், இவர்களுக்கு பின்னால் ஒருவர் கூட போகமாட்டார்கள். 


​​இந்த மடையர்கள் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுக்கும் வேலையை செய்துக் கொண்டு இருக்கிறார்கள். தௌஹீதில் இருக்கும் ஒவ்வொரு முஸ்லிம்களையும் குப்ரின் பக்கம் அழைத்து செல்ல பார்க்கிறார்கள். 


ஆதலால் ஏகத்துவத்தை பார்த்து குப்ரியத் என்று கூறும் இந்த குருடர்களுக்கு பின்னால் சென்று விடாதீர்கள்.


​​அவர்கள் தௌஹீத்வாதி என்ற பெயரில் வந்தாலும் சரி, தீன்தாரி என்ற பெயரில் வந்தாலும் சரி, தரீக்காவாதி என்ற பெயரில் வந்தாலும் சரி உங்கள் ஈமானை பாதுகாத்துகொள்ளுங்கள்.


​​இறுதி நாள் நெருங்கும் போது பூமியில் அறியாமை பெருகி விடும், மடையர்கள் பெருகி விடுவார்கள், மடையர்கள் மார்க்க தலைவர்களாக வருவார்கள், அவர்கள் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள்.


​​அத்தகைய அடையாளங்களை இன்று நம் கண்களினால் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மிகவும் விழிப்பாக இருந்துக்கொள்ளுங்கள்.


எமது முன்னோர்களான ஸுபியாக்கள், ஸாலிஹீன்கள் காட்டித் தந்த உண்மை ஏகத்துவத்தை கற்று அந்த வழியை பின்பற்றி வாழ முயற்சி செய்யுங்கள்.​​ அதுவே நமக்கு ஈருலகிலும் வெற்றியை தரும். 


அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு தெளிவாக்குவதற்கும் உங்களுக்கு முன்னிருந்த (நல்ல) வர்களின் நேரான வழிகளில் உங்களை வழி நடத்துவதற்கும், உங்களுடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வதற்கும் விரும்புகிறான்.  (அல் குர்ஆன் 4:26)​​


​​ 

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஏகத்துவம் என்றால் என்ன?

​ 

ஏகத்துவம் என்றால் என்ன? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

​​​​​