MAIL OF ISLAM

Knowledge & Wisdom





தமிழ் பகுதி -  அல் ஹதீஸ் 

அல் ஹதீஸ் (நபிமொழிகள்)


அல் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை குறிக்கும். அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் செய்யும்படி கூறியவை, அன்னவர்கள் செய்தவை, அன்னவர்களின் சமூகத்தில் பிறர் செய்யும்போது அதனை அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.


அல் ஹதீஸ் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களில் இரண்டாவதாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை, அல் குர்ஆனிற்கு விளக்க முறையாகவே இருந்தது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றாமல் மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாது.


உதாரணமாக - அல் குர்ஆனில் தொழுகையானது முஸ்லிம்களுக்கு கடமையென சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொழுகை முறைகள், தொழுகையில் ஓத வேண்டிய வசனங்கள், தொளுகையினால் கிடைக்ககூடிய நன்மைகள், விட்டால் கிடைக்கும் தண்டனைகள் எல்லாம் அல் ஹதீஸிலேயே சொல்லப்பட்டுள்ளது. அல் குர்ஆனில் இவை பற்றி தனி தனியாக எதுவும் சொல்லப்பட்டு இல்லை. எனவே மார்க்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றல் மிக அத்தியாவசியமாகிறது.

அல் ஹதீஸ்கள் பிற்காலத்தில் வந்த இமாம்களால் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன​. அவற்றில் மிகவும் ஆதாரப்பூர்வமானவை என முழு உலக முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை ஆறு கிரந்தங்களாகும். அவையாவன :


(1) ஸஹிஹ் அல் புகாரி       (2) ஸஹிஹ் முஸ்லிம்      (3) அபுதாவூத்      (4) திர்மிதி       (5) நஸாயீ        (6) இப்னு மாஜா


ஆனாலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் வேறு பல ஹதீஸ் கிரந்தங்களிலும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முஸ்லிம் அறிஞர் பெரு மக்களால் ஏற்று கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.


ஹதீஸ்கள் அவற்றின் தரத்திற்கேற்ப ஸஹீஹ், ஹஸன், லயீப், மவ்து என வகைப்படுத்தப்பட்டுள்ளன.​​

ஐம்பெரும் கடமைகள்

நபிமார்களும் வலிமார்களும்

சுன்னத்தான தொழுகைகள்

அகீதா - கொள்கை

சுன்னத்தான நோன்புகள்

ஏனைய வணக்கங்கள்

பித்அத்

மரியாதைக்காக எழுந்து நிற்பது