MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தொழுகையில் விரல் அசைக்க கூடாது


அத்தைஹிய்யாத் இருப்பில் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் துஆ ஓதும் போது விரலால் சமிக்கை செய்தார்கள். விரலை அசைக்க மாட்டார்கள்.


அப்துல்லாஹ் இப்னு சுபைர்

அபூதாவுத்.



  அத்தைஹிய்யாத் இருப்பில் விரலால் சமிக்கை செய்தார்கள். ஆட்டவில்லை. நூமய்ருல் குஜாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தொழுகையில் தங்களது வலது கரத்தை வலது தொடையின் மீது வைத்து சுட்டு விரலால் சமிக்கை செய்ததை நான் பார்த்தேன்.


இப்னு மாஜா



  நான் இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தொழுகையை பார்த்தேன். (விரல்களால்) வளையமிட்டார்கள். பின்பு அவர்களின் (கலிமா) விரலை உயர்த்தினார்கள். அவ்விரலை அசைத்து துஆ ஓதியதை நான் பார்த்தேன்.


வாயில் இப்னு ஹுஜ்ர் ரலியல்லாஹு அன்ஹு

பைஹகி



மேற்காணும் ஹதீஸுக்கு இமாம் பைஹகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அதே கிதாபில் விளக்கம் கொடுக்கும்போது :


'அசைத்தார்கள்' என்பதைக் கொண்டு நோக்கம் சுட்டி காட்டுவது மட்டுமே.

தொடர்ந்து ஆட்டிக் கொண்டிருப்பது என்பதல்ல. இவ்வாறு பொருள் கொண்டால்தான் அப்துல்லாஹ் இப்னு சுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸிற்கு முரண்படாமல், உடன்பாடாக இருக்க வழியேற்படும்.


பைஹகி 2 - 132