MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தராவீஹ் 20 ரக்அத்
♣ ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு
பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104
♣ உமர் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.
யஸீத் இப்னு ரூமான்
முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா 1-104
♣ ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (ஸஹாபாக்கள்) 20 ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர்.
ஸாயிப் இப்னு யஸீத்
ஸுனன் பைஹகி , பத்ஹுல் பாரி , 5 - 157, ஐனி (புகாரி விரிவுரை) 11 - 127
♣அமீருல் முஹ்மினீன் ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் ஸலமி
சுனன் பைஹகி
♣ கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) , கலீபா உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு), கலீபா அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் காலத்தில் தராவிஹ் 20 ரக்அத்துக்களே நடைமுறையிலிருந்து இமாம் ஷாபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) மக்காவில் தராவிஹ் இருபது ரக்அத் நடைமுறையிலிருப்பதை நான் கண்டேன் என்றும் கூறியுள்ளார்கள்.
ஜாமிஉத் திர்மிதி