MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தல்கீன்

​​

மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தோழர்களுள் ஒருவரான அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு வஸிய்யத் செய்துள்ளார்கள். அதாவது ஒரு ஒட்டகத்தை அறுத்து அதன் மாமிசத்தை பங்குவைக்க எந்தளவு நேரம் தேவைப்படுமோ அந்தளவு எனது கப்றுக்குப் பக்கத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், எனது இரட்சகனின் தூதர்கள், அதாவது மலக்குகளிடம் நான் எதனை உரையாட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும். உங்களின் மூலம் நான் மறுகுதல் பெறவும் என்றார்கள்.


​முஸ்லிம், மிஷ்காத் - 149



  ஸஹதுப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், தஸ்பீஹும், தக்பீரும் ஓதினார்கள். உடனே ஸஹாபாக்கள் அவைகளை அதிகமாக ஓதினார்கள். பின்பு ஸஹாபாக்கள் காரணத்தை வினவிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு பதிலளித்தார்கள்.


"ஸாலிஹான இந்த நல்லடியாரை கப்ரு நெருக்கிக்கொண்டே இருந்தது. அல்லாஹுதஆலா கப்ருடைய நெருக்கத்தை அகற்றும் வரைக்கும் நான் தஸ்பீஹும், தக்பீரும் ஓதிக்கொண்டே இருந்தேன்" என்றார்கள்.


​அஹ்மத், மிஷ்காத் - 26