MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
கண்ணூறு / ஓதி பார்த்தல் / தாயத்து அணிதல்
♣ உங்களில் ஒருவர் தூக்கத்தில் திடுக்கிட்டால், ‘அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகழபிஹி வ இஃகாபிஹி வஷர்ரி இபாதிஹி வமின் ஹமஸாத்திஷ் ஷயாத்தீனி வஅன்ய் யஹ்ழுரூன். ஃப இன்னஹா லன் தாழுர்ரஹு’ என்று ஓதிக் கொள்ளுமாறு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். இனி அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இதனை பருவமடைந்த தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பவராகவும், பருவமடையாத குழந்தைகளுக்கு ஒரு பொருளில் எழுதி அதனை அவர்களின் கழுத்தில் தொங்கவிடுபவராகவும் இருந்தனர்’
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷுஐப் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: திர்மிதி, பாகம் 5 பக்கம் 313. அபூதாவூத், பாகம் 4 பக்கம் 218