MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுன்னத்தான நோன்புகள்
♣ ஷவ்வால் 6 நோன்பு
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவரேனும் ஒருவர் ரமழானில் நோன்பு நோற்றபின் அதையடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்றாரோ அவர் அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்றதாகக் கருதப்படுவார்.
முஸ்லிம்
♣ அரபா நோன்பு
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
அரஃபா நோன்பானது கடந்து போன வருடத்தினதும் பிறக்கவுள்ள வருடத்தினதும் பாவங்களுக்கான பிராயச் சித்தமாக அமைந்து விடுகின்றது.
புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா
♣ பிறை 13, 14 , 15 நோன்புகள்
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதாக இருந்தால் பிறை 13,14,15 ஆகிய (அய்யாமுல் பீல்) நாட்களில் அதனை நிறைவேற்றுங்கள்.
அபூதாவூத், திர்மிதி, நஸாஈ
♣ திங்கள் மற்றும் வியாழன் நோன்புகள்
கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும். “திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அடியானின் வணக்க வழிபாடுகள் சமர்ப்பிக்கப்படும். அதனால், நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் எனது நற்செயல்கள் அல்லாஹ்வின் முன் சமர்ப்பிக்கப்படுவதையே விரும்புகின்றேன்.
அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாஈ