MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸதகதுல் பித்ரா


  முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழஙக வேண்டுமென்று) நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். (குறிப்பு: ஸாஉ என்பது சுமார் 2.135 கிலோ கிராம் எடைக்கு சமமான அளவாகும்)


இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1503



  நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாஉ உணவை (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன.


அபூசயீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1510