MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
பிறை பார்த்தல்
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ரமழான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள் (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக்கொள்ளுங்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி 1906
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி 1907
♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள் (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள் உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி 1900