MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
புகாரி 2017
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ, அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 1901
♣ (ரமழானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
புகாரி 2024
♣ அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம், லைலத்துல் கத்ர் இரவை (இதுதான் என) அறிந்துகொண்டால் நான் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்டபோது, “அல்லாஹூம்ம இன்னக்க அஃபூவன் துஹிப்புல் அஃப்வஃ ஃபு அன்னி – யா அல்லாஹ்!’ (அல்லாஹ்வே! நீ எப்போதும் மன்னிப்பவனாக இருக்கின்றாய். நீ மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே, என்னையும் மன்னிப்பாயாக!) எனும் துஆவை ஓதுமாறு பணித்தார்கள்.
திர்மிதி, இப்னு மாஜா