MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஜும்மாவுக்கு முன் ஸுன்னத் உண்டு


  ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குத்பா பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக்குல் அத்பானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியினுள் நுழைந்தார்கள். அன்னாரை விளித்து இங்கு (பள்ளிக்கு) வர முன் (வீட்டில்) தொழுதீரா? என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். இரண்டு ரகஅத்துகள் தொழுவீராக என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பணித்தார்கள்.


அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு  

இப்னு மாஜா



  ஜும்ஆவுக்கு முன் நான்கு ரகஅத்துகளும் பின் நான்கு ரகஅத்துகளும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தொழுவார்கள்.


அலி ரலியல்லாஹு அன்ஹு

பைழுள் கதீர் 5 - 216



   ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ளுஹருக்குப் பின்பும் இரு ரகஅத்து (ஸுன்னத்) தொழுவார்கள்.


ஸஹிஹுல் புகாரி



ஜும்ஆத் தொழுகை ளுஹருக்குப் பதிலாக அமைவதனால், ஜும்ஆவுக்கு முன்பும், பின்பும் தொழும் தொழுகை என இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தலைப்பிட்டு லுஹரிலிருந்து ஜும்ஆவை கியாஸ் பிடித்து ஜும்ஆவுக்கு முன் இரு ரக்அத்துகள் தொழுவது ஸுன்னத் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதனைப் பின்பற்றி ஏனைய ஹதீஸ்கலை தொகுப்பாளர்களும் ஜும்ஆவுக்கு முன் இரு ரக்அத் தொழுவது ஸுன்னத் எனத் தலைப்பிட்டுள்ளார்கள். இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷஹீஹுல் முஸ்லிமின் விரிவுரையில் ஸுலைக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதை ஆதாரமாகக் கொண்டு ஜும்ஆவுக்கு முன் இரு ரக்அத் தொழுவது ஸுன்னத் என விளக்கம் எழுதியுள்ளனர்.


ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஅத்தாபிஈன்கள் அனைவரும் இதன்படி அமல் செய்துள்ளனர். இதனை மறுப்பவர் ஸுன்னத்தை மறுப்பவராவார்.