MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஹஜ்

♣  இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலைநிறுத்துவது. 3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றேhர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.


ஸஹீஹுல் புகாரி - 08



  அப்துல்லாஹ் இப்னு அமர் அப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து 'நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்' என்றார். அதற்கவர்கள் 'பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்' என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்' என்றார். அதற்கு நபியவர்கள் 'பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!' என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் 'பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்' என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்"என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.

ஸஹீஹுல் புகாரி - 83



  அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

செயல்களில் சிறந்தது எது என்று நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது."அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது" என்றார்கள். அதற்கு பிறகு எது? என கேட்கப்பட்டபோது "இறைவழியில் போர் புரிதல்" என்றார்கள். அதற்கு பிறகு எது? என கேட்கப்பட்டபோது "பாவச்செயல் எதுவும் கலவாத ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.

ஸஹீஹுல் புகாரி - 1519



  அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள். உடலுறவு மற்றும் பாவச்செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனை பெற்றெடுத்த நாளில் இருந்ததை போன்று (பாவமறியா பாலகனாக) திரும்புவான்.

ஸஹீஹுல் புகாரி - 1521