MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
குனூத்
♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தனர்.
அல் பர்ராஉ (ரலியல்லாஹு அன்ஹு)
அபூதாவுத்
♣ அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஸுப்ஹுத் தொழுகையில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குனூத் ஓதினார்களா? என வினவப்பட்ட போது ஆம் எனப் பதிலிருத்தனர். ருகூஉக்கு முன்னரா? பின்னரா? என வினவ ருகூஉக்குப் பின்னர் என விடை பகர்ந்தனர்.
அபூதாவுத் 1 - 313
♣ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் (வபாத்) வரை ஸுப்ஹில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
தாரகுத்னி 2 - 39 - 41
முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் 3 - 110
அத்காறுந் நவவி 57
♣ அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு இருவரும் ஸுப்ஹுத் தொழுகையில் ருகூஉக்குப் பின்னர் குனூத் ஓதினார்கள்.
அபூ உத்மான் (ரலியல்லாஹு அன்ஹு)
தாரகுத்னி - பைஹகி
♣ நான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஊரிலும், பிரயாணத்திலும் தொழுதிருக்கிறேன். அன்னார் ஸுப்ஹில் ருகூஉக்குப் பின் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். மற்ற தொழுகையில் குனூத் ஓதுவதில்லை.
அல் அஸ்வத் (ரலியல்லாஹு அன்ஹு)
பைஹகி
♣ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் ருகூஉக்குப் பின் இரு கரங்களையும் உயர்த்தி சப்தமிட்டு துஆ கொண்டு குனூத் ஓதுவார்கள்.
அபூராபி (ரலியல்லாஹு அன்ஹு)
பைஹகி