MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம்
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"இவ்வுலகில் ஒரு நாள் மட்டும் மீதமிருந்தால், எனது குடும்பத்திலிருந்து ஒரு மனிதரை அல்லாஹ் எழச் செய்வான். போர்களால் நிரம்பி இருக்கும் இந்த பூமியில் அவர் நீதியை நிலை நிறுத்துவார்"
ஹழ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு)
அபூதாவூத் 4270
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரபுகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்"
ஹழ்ரத் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி 2331, அபூதாவூத் 4269
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மஹ்தி எனது சந்ததியைச் சேர்ந்தவராவார். அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்"
ஹழ்ரத் அபூஸயீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)
அபூதாவூத் 4272
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மஹ்தி என் குடும்பத்தை சேர்ந்தவர். பாத்திமாவின் சந்ததிகளில் இருந்து வருபவர்"
அபுதாவூத் 4271, மிஷ்காத் 5461
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"இவ்வுலகில் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான்"
ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி 2332, இப்னுமாஜா 4085
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எனது சமுதாயத்தின் இறுதியில் ஒரு கலீபா வருவார். அவர் மக்களுக்கு கணக்கின்றி வாரி வழங்குவார்"
ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு)
முஸ்லிம் 6961