MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுரா யாஸீனின் சிறப்புகள்
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான்.
திர்மிதீ 2812, தாரமி 3282
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாசீன் (சூராவை) ஒதுகிறாறோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு - தாரமி 3322, இப்னு ஹிப்பான் 2639
♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்.
மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு
அபூதாவுத் 2717, இப்னு மாஜா 1438, அஹ்மத் 19842, இப்னு அபீஷைபா 10473
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள்.
மஃகில் ரலியல்லாஹு அன்ஹு
முஸ்னத் அஹ்மத், பைஹகி 2458, மிஷ்காத் 2178