MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஆத்மா ஒன்று அதன் வகைகள் ஏழு​

எழுதியவர்:  நஸுர்தீன் காசிம்


உலக மாயை என்னும் வலையிலிருந்து தப்பி, உடல் என்ற சிறையை விட்டு வெளியாகி, மகா பரிசுத்தனான அல்லாஹ்வின் மகாமை சென்றடைய ஆவல் கொண்டு சத்முயற்சி என்னும் வாகனத்தில் ஏறி, ஷைத்தான் என்ற பகைவனோடு மோதுவதற்காக தெய்வத் திரு நாமங்களான 'அஸ்மாக்கள்' என்ற ஆயுதங்களைப் பூட்டி, சற்குணமெனும் அணிமணிகளை அணிந்து, இறைத்தூதர்கள், இறைநேசர்கள்  சென்ற பாதையில் செல்வது  நமது  இஸ்லாமிய சுலூக் என்னும் பாதை ஆகும்.


நமது ஆத்மாவின் தன்மைகளை ஏழாகப் பிரித்துள்ளார்கள்.


​​முதலாவது நப்ஸ் அம்மாரா. இது இருள் நிறைந்தது.


​​இரண்டாவது நப்ஸ் லவ்வாமா. இது ஒளியின் தன்மையைக் கொண்டது.


​​மூன்றாவது நப்ஸ் முல்ஹிமா. இது அகமியத்தின் தன்மை கொண்டதாகும்.


​​நான்காவது நப்ஸ் முத்மஇன்னா. இது சம்பூரணத் தன்மை கொண்டதாகும்.


​​ஐந்தாவது நப்ஸ் ராளிய்யா. இது விஸால் என்னும் சேர்மானத்துடைய தன்மை கொண்டதாகும்.


​​ஆறாவது நப்ஸ் மர்ளிய்யா. தஜல்லியாதுல் அப் ஆல் தரிசனை வெளியாகும் தன்மை கொண்டதாகும்.


​​ஏழாவது நப்ஸ் காமிலா. சிபத்துக்களும், அஸ்மாக்களும் வெளிப்படும் தன்மை கொண்டதாகும்.


​​இவ்வாறு ஆத்மாவை ஏழாகப் பிரித்தாலும் உண்மையில் ஆத்மா ஒன்றுதான். அதிலுண்டாகும் தன்மைகளுக்கேற்ப அது மாற்றமடைகிறது.


​ஒருவன் இவற்றுள் ஒரு வகையின் குணத்திலிருக்கையில் அது மேலுள்ள நிலைக்கு அது திரையாக அமைந்த விடுகிறது.


​​உதாரணமாக: நப்ஸ் அம்மாராவில் இருக்கும்போது அதற்கு மேலுள்ள லவ்வாமாவுக்குத் திரையாக இருக்கிறது. இது போலவே கீழேயுள்ளவை மேலே உள்ளவைகளுக்குத் திரையாக இருக்கிறது. ஒவ்வொரு நிலையின் தன்மைக்கேற்ப அதை அறியும் இறை நேசர்கள் அந்தந்த நிலைகளுக்குரிய அமல்களைத் திட்டப்படுத்துவார்கள்.​​

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​

பையத் என்றால் என்ன? (BAIYATH)


​பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஸுfபி ஞானத்தின் பிறப்பிடம் மஸ்ஜிதுன் நபவி​

​ 

அஸ்ஹாபுஸ் ஸுfப்fபா - திண்ணைத் தோழர்கள் என அழைக்கப்படும் ஸஹாபாக்கள் மூலம் சூfபி ஞானகலை உருவாகியதை அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

நப்ஸின் வகைகளும், அவைகளின் தன்மைகளும்


​​மனிதர்களின் மனம் எனும் நfப்ஸின் வகைகளையும் அவைகளின் தன்மைகளையும் பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.