MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஆன்மீகம் என்றால் என்ன? 

எழுதியவர்:  அஸீஸ் மரைக்கா காதிரி


ஆன்மாவை மீட்டுதல் அல்லது ஆன்மாவின் மீட்சி என்று சொல்லலாம். அப்படி ஆன்மாவை மீட்டுதல் என்றால் எங்கிருந்து மீட்டுவது?


ஒருவர் தனது அற்ப சந்தோஷத்திற்காக கிளியை பிடித்து கூண்டில் அடைத்து வளர்க்கிறார்.


அந்த கிளியின் எதார்த்த சுதந்திரத்தை, அந்த கிளியின் சுய இயக்கத்தை, அந்த கிளியின் இன்பத்தை மொத்தமாக அந்த கிளியின் முழு ஆற்றலையும் அந்த கூண்டில் சிறைப்படுத்தி விடுகிறார்.


நாளடைவில் அந்த கிளியும் தன் ஆற்றலை மறந்து தன் இன்பத்தை இழந்து அந்த கூண்டே உலகமென வாழ்ந்து வருகிறது. அந்த கிளிக்கோ சுய சக்தி ஆற்றல்கள் அனைத்தும் மறந்து போயிற்று.


மனிதாபிமானமும், ஜீவகாருண்யமும் உள்ள ஒருவர் அந்தக்கிளியை கூண்டில் முடக்கியவரை அடக்கி அந்தக்கிளியை விடுதலை செய்தால் மற்றவர்கள் அவரை பாராட்டி புகழ்வார்கள்.


அதுபோல நமது ஆன்மாவும் பஞ்சபூதங்களின் சிறையில் பஞ்ச புலன்களின் கட்டுப்பாட்டில் சுய இயக்கத்தை, சுய சக்தியை மறந்து நம்மில் சிறைப்பட்டுள்ளது.


இந்த ஆன்மாவை சிறைப்படுத்திய பஞ்சபுலன்களை அடக்கி சிறைப்பட்ட ஆன்மாவை விடுதலை செய்து அதன் சுய சக்தியோடும் ஆற்றலோடும் இயங்க வைப்பவரே இறை நேசராவார்.



தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


பையத் என்றால் என்ன? (BAIYATH)


பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஸுfபி ஞானத்தின் பிறப்பிடம் மஸ்ஜிதுன் நபவி​

​ 

அஸ்ஹாபுஸ் ஸுfப்fபா - திண்ணைத் தோழர்கள் என அழைக்கப்படும் ஸஹாபாக்கள் மூலம் சூfபி ஞானகலை உருவாகியதை அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

நான் யார்?

​ 

நான் உடல் அல்ல? நான் மனம் அல்ல? நான் சிந்தனையும் அல்ல?  நான் யார்? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.